அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது
குளிர்கால ஒன்றுகூடல் 2016
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 2016
இவ்வருடம் (2016) எமது சங்கத்தினால் வழங்கப்பட்ட முதற்கட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட எம் கிராமத்து மக்களின் விபரங்கள்
குளிர்கால ஒன்றுகூடல் 2015
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 2015
அண்மையில் எமது ஒன்றியத்தின் தாயக நிர்வாக குழுவினர் வடமாகாண முதலமைச்சர் திரு. சி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து மயிலிட்டி மீள்குடியேற்றம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுக்கப்பட்ட படம். இவ்விடயம் குறித்து தன்னாலான முயற்ச்சிகளை எடுப்பதாக முதலமைச்சர் கூறினார்.
எமது உதவித்திட்டத்தில் இவ்வருடம் 2015
அறிவிப்பு
எமது ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மார்ச் 29, 2015 அன்று 2460 எக்லின்ரன் அவெனியூவில் இடம்பெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் 2014-ம் ஆண்டின் நிர்வாககுழுவினைரையே தொடர்ந்து
2015-ம் ஆண்டிற்கும் நிர்வாகக்குழுவினராக இருக்குமாறு ஏகமனதாக தெரிவு செய்தனர்.
அவர்கள் முறையே,
தலைவர்: திரு. குணசீலன் தம்பிராஜா
உபதலைவர்: திரு. சுதாகர் அருணகிரிராஜா
செயலாளர்: திரு. தேவச்சந்திரன் நவமணி
உபசெயலாளர்: திரு. பாலகணேஸ் பாலசுந்தரம்
பொருளாளர்: திருமதி. மோகனா விஜயரஞ்சன்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: திருமதி. பத்மராணி ஜெயபாலன்
திரு. சண்முகராஜா சண்முகலிங்கம்
திரு. சிவசோதி குருசாமி
திரு. தேவதாசன் செல்வராசா
திரு. ஜெயசீலன் தம்பிராஜா
திரு. சத்தியசீலன் தம்பிராஜா
தாயக நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: திரு நா. வடிவேஸ்வரன்
திரு. சி. ஜோர்ஜ்
திரு. ந. இளங்குமரன்
திரு. பொ. இராசகுமார்
குளிர்கால ஒன்றுகூடல் 2014
எமது ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான மூன்றாம் கட்ட கொடுப்பனவில் ஆறு குடும்பங்கள் தலா ரூபா 25000.00 பெறுமதியான கடைப்பொருட்கள், விறகு வியாபாரத்திற்கு தேவையான விறகுகள், சைக்கிளுடன் பலகார வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள், கோழிகளுடன் கூடிய கோழிக்கூடு ஆகியன வழங்கப்பட்டன. அத்துடன் மூன்று முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தலா ரூபா 5000.00-ம் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு ரூபா 40,000.00-ம் கலைமகள் பாடசாலைக்கு ரூபா 30,000.00-ம் வழங்கப்பட்டன.
மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் 2014
எமது ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான (2014) இரண்டாம் கட்ட கொடுப்பனவில் பெற்றோரை இழந்த மற்றும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த பத்து மாணவர்கள் புதிய துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டனர்.
அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் மற்றும் ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
எமது உதவித்திட்டத்தில் இவ்வருடம் (ஏப்ரல் 2014) ஏழு குடும்பங்கள் தையல் மெசின்களை பெற்றுக்கொண்டனர். சிறு கடை ஒன்றை நடத்திவரும் கால் ஊனமுற்ற ஒருவருக்கு அவரின் வேண்டுகோளின்படி கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளோம்.
இடையறாது இவ்வுதவிகளை செய்வதற்கு சலிப்பின்றி உதவிடும் கரங்களுக்கு சங்கம் கரம்கூப்பி நன்றிகளை தெரிவிக்கிறது.
உலகிலே மிகப்பெரிய விடயம் தானமே என்று மகாபாரதம் கூறுகிறது.
அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்
மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள்.பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.
குளிர்கால ஒன்றுகூடல் 2013
கலாபூஷண விருது பெற்ற மயிலையின் மைந்தர்கள்.
15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது, இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசன விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும், நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு. வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் அனைத்து மயிலை மக்கள் சார்பாக உளமார வாழ்த்துகின்றோம்.
இவ்வருடம் (2011) ஆடிமாத முற்பகுதியில் 11 குடும்பங்கள் எங்கள் தொழில் முயற்சித்திட்டத்தில் பயன்பெற்றனர். நான்கு குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகளும், மூன்று குடும்பங்களுக்கு கோழிகளுடன்கூடிய
கோழிக்கூடுகளும், மேலும் நான்கு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்ட உதவியாக கார்த்திகைமாத ஆரம்பத்தில் மேலும் 10 குடும்பங்கள் தொழில் முயற்சித்திட்டத்தில் பயன்பெற்றார்கள். இதில் 9 குடும்பங்களுக்கு கோழிகளுடன்கூடிய கோழிக்கூடுகளும், ஒரு குடும்பம் தையல் மெசினையும் பெற்றுக்கொண்டார்கள். அத்துடன் தொழில்செய்ய இயலாத 7 வயோதிபர்களுக்கு தலா 10,000 ரூபாய்கள் தபாலகத்தில் வைப்பிலிடப்பட்டு அதிலிருந்து மாதாமாதம் 2,000 ரூபாய்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவிய உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்- நிர்வாகம்.